எட்டாம் வகுப்பு முடிந்திருந்தால் போதும் ! இதோ அரசு வேலை!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து எட்டாம் வகுப்பு முடித்து தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: டிரைவர், ஜாடுமாலி, தோட்டி, உபகோவில் அர்ச்சகர், ஒதுவார், பாதுகாப்பு, குழுகோவில் காவல்

மொத்த பணியிடங்கள்: 7

கல்வி தகுதி:

டிரைவர் – 8வது தேர்ச்சி. ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும். 1 வருட பணி அனுபவம் வேண்டும்.

ஜாடுமாலி, தோட்டி, பாதுகாப்பு அதிகாரி, குழுகோவில் காவல் –தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதுமானது.

உபகோவில் அர்ச்சகர், ஒதுவார் –தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகம அறிவு மற்றும் ஆகம சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

ஓதுவார் : ரூ.18500 மற்றும் இதர படிகள்.

ஓட்டுநர்: ரூ.15300 மற்றும் இதர படிகள்.

ஜாடுமாலி: 6900 மற்றும் இதர படிகள்.

தோட்டி: 6900 மற்றும் இதர படிகள்.

உபகோவில் அர்ச்சகர்: ரூ.11600 மற்றும் இதர படிகள்.

காவல்: ரூ.15700 மற்றும் இதர படிகள்.

குழுக்கோயில் காவல் : ரூ.3600 மற்றும் இதர படிகள்.

வயது: 18 முதல் 35 வயது வரை

கட்டணம்: ரூ.100/-

தேர்ந்தெடுக்கும் முறை: தபால் மூலம் விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 12.03.2021அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/tn-aranilai-turai-11-02.pdf

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :