கொங்கு மண்டலத்தில் தருமபுரி தொகுதியை மட்டும் கொடுப்பது என அதிமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அன்புமணிக்கு அதே தொகுதியைக் கொடுத்து வெற்றி பெற வைப்பதற்காக உழைப்போம் எனக் கூறிவிட்டனர்.
ஆனால், அந்த ஒரு தொகுதி மட்டும் போதாது. கிருஷ்ணகிரியையும் சேர்த்துக் கொடுங்கள் என ராமதாஸ் பிடிவாதம் காட்டத் தொடங்கியிருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த ஆளும்கட்சியினர், உங்களுக்கு ஒரு தொகுதியைக் கொடுத்தால் அடுத்த தொகுதியை எங்களுக்குத் தர வேண்டும் என்பதுதான் கூட்டணி தர்மம்.
நீங்கள் தருமபுரியை எடுத்துக் கொண்டால், நாங்கள் கிருஷ்ணகிரியை எடுத்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். இந்தப் பதிலில் சமாதானம் அடையாத ராமதாஸ், 'நான் கேட்பது ஜி.கே.மணிக்காகத்தான். அவருக்காக ஒதுக்கிக் கொடுங்கள்' எனக் கேட்டிருக்கிறார்.
இதேபோல், வடமாவட்டங்களிலும் தங்களுக்குச் செல்வாக்கான தொகுதிகளைச் சுருட்டிக் கொள்ளும் முடிவில் உள்ளதாம் பாமக.
கூட்டணி மோதல் இப்போதே தொடங்கிவிட்டதாகச் சொல்கின்றனர் பாட்டாளி சொந்தங்கள்.
-எழில் பிரதீபன்