பாமகவிற்கு இணையாக சீட்டுக்கேட்டதும், இடைத்தேர்தல் தொகுதியில் 3 சீட்டுகள் கேட்டதும்தான் தேமுதிக- அதிமுக பேச்சுவார்த்தை இழுபறிக்கு முக்கிய காரணம்.
அதிமுக தரப்பில், தேமுதிகவுக்கு 3 இடம், இடைத்தேர்தேர்தலில் சீட் இல்லை, அதேசமயம் இடைத்தேர்தலிலிம் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என பாஜக மூலமாகவே பிரேமலதாவிடமும் சுதீசிடமும் சொல்லப்பட்டது.
அதைக்கேட்ட சுதீஷ், பிரேமலதாவிடம் பேசிவிட்டு, இடைதேர்தலில் தொகுதி இல்லையென்றால், பாமகவுக்கு ஒதுக்கியது போல ராஜ்யசபா சீட் ஒதுக்குங்கள், ஆதரிக்கிறோம். இல்லையெனில் எம்.பி.தேர்தலுக்கு மட்டும் கூட்டணி பேசுவோம் என சுதீஷ் , பாஜகவிடம் சொல்லிவிட்டார்.
இதுதான் இழுபறிக்கு காரணம். இந்த நிலையில்தான் தேமுதிகவுடன் நேரடியாக அதிமுக குழு பேசச் செல்கிறது.
எழில் பிரதீபன்