மூன்று ஃபாரீன் பிளேயர்ஸ்.... - முதல் போட்டியிலேயே சேசிங்கை தேர்வு செய்த தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதில் சென்னை அணி முதலில் பௌலிங் செய்யவுள்ளது.

12-வது ஐபிஎல் சீசன் தொடக்கம், டி20 கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் இன்று தொடங்குகின்றன. முதலாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனால் தான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னை அணி ட்ரெண்ட் ஆகி வந்தது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே போட்டி இன்று தொடங்கியது. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பௌலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடங்கவுள்ளது. இரு அணி வீரர்கள் விவரம் பின் வருமாறு....

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : பார்த்தீவ் படேல், விராட் கோஹ்லி, மொயீன் அலி, ஏபி டி-வில்லியர்ஸ், ஹெடமையர், ஷிம்ம் டூப், கொலின் டி கிராண்ட்ஹோம், உமேஷ் யாதவ், சஹால், முகமது சிராஜ், நவதீப் சைனி

சென்னை சூப்பர் கிங்ஸ்: அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, தீபக் சாஹார், ஷர்துல் தாகூர், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
மேலும் செய்திகள்
Indian-cricket-squad-west-indies-tour-announced
மே.இ.தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு
Indian-cricket-wicket-keeper-ms-Dhoni-pulls-out-West-Indies-tour-decides-serve-army-2-months
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு
In-cricket-Substitute-players-permitted-to-batting-and-bowling-when-players-injured-ICC-announced
கிரிக்கெட் விதிகளில் அதிரடி திருத்தம்; சப்ஸ்டிட்யூட் வீரர்களும் பேட்டிங், பந்து வீச அனுமதி
CWC-England-won-the-world-cup-in-thrilling-match-against-New-Zealand
என்னா 'த்ரில்'... முதல்ல 'டை'... சூப்பர் ஓவரும் 'டை'...! இங்கிலாந்து
CWC-final-England-242-runs-New-Zealand-match-capture-Cup-first-time-history
உலக கோப்பையை கைப்பற்றுமா இங்கிலாந்து...? 242 ரன்கள் எடுத்தால் சாத்தியம்
England-vs-New-Zealand-CWC-final
உலக கோப்பை பைனல்; நியூசிலாந்து பேட்டிங் - வெல்லப் போவது யாரு?
CWC--what-prize-amount-each-team
உலக கோப்பை 'திருவிழா' இன்றுடன் நிறைவு..! யாருக்கு எவ்வளவு பரிசு தெரியுமா?
CWC--what-is-the-prize-amount-for-each-team
உலககோப்பை பைனல் : இங்கி.,VS நியூசி., மல்லுக்கட்டு; முதல் முறை கோப்பை யாருக்கு ..?
20-year-old-Rashid-Khan-appointed-as-Afghanistan-captain-of-all-forms-of-cricket
20 வயதான ரஷீத்கான்.. ஆப்கன் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன்
CWC-No-flight-tickets-to-return-home-team-India-stranded-in-England-till-Sunday
'நாடு திரும்ப டிக்கெட் கிடைக்கல..' எதிர்பாராத தோல்வியால் இந்திய அணிக்கு இப்படியும் ஒரு சோதனை
Tag Clouds