பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பெங்களூரு மழையால் ரத்தான போட்டி வெளியேறியது பெங்களூரு அணி!

Rain spoiled the match RCB left away from IPL 2019

by Mari S, May 1, 2019, 12:43 PM IST

ஐபிஎல் போட்டிக்கும் பெங்களூரு அணிக்கும் ராசியே இல்லை போல, இந்திய அணியின் கேப்டன் கோலி, அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் போன்ற பல சிறப்பான வீரர்களை கொண்டிருந்தும் பெங்களூரு அணியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஏன் அதை நெருங்கக் கூட முடிவதில்லை.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியிலும் பெங்களூரு அணி துவக்கம் முதலே சொதப்பி வந்தது. நடுவில் திடீரென மீம்ஸ்களின் எரிச்சல் தாங்க முடியாமல் கேப்டன் கோலி சதமடிக்க ஒரு 4 போட்டிகளில் பெங்களூரு அணி வெற்றி பெற்று, எப்படியாவது பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடலாம் என்ற கனவை பெங்களூரு ரசிகர்களுக்கு அளித்தது.

ஆனால், அதன் பின், மீண்டும் பழையபடியே தோல்வியை தழுவியது. நேற்று இரவு பெங்களூருவில் நடந்த போட்டியும் மழையால் ரத்தாக வெறும் 9 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணியால் இனி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. வரும் மே 4ம் தேதி ஐதராபாத் அணியுடன் விளையாடவுள்ள கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் பெங்களூரு அணியால் 11 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல குறைந்த பட்சம் 16 புள்ளிகள் தேவை என்பதால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் இருந்து முதல் அணியாக பெங்களூரு வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

டெல்லி மற்றும் சென்னை அணிகள் தலா 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

அடுத்து மும்பை அணி 14 புள்ளிகளும், ஐதராபாத் அணி 12 புள்ளிகளுடனும் உள்ளன. அதற்கடுத்த நிலையில், ராஜஸ்தான் 11 புள்ளிகளுடனும் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தலா 10 புள்ளிகளுடனும் இருக்கின்றன.

ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகளுக்கும் இன்னும் குறைவான போட்டிகளே இருப்பதால், அந்த அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாத சூழலே நிலவி வருகின்றன.

கேப்டன் கோலி டீம் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலாவது நல்ல பவுலர்களுடன் களமிறங்கி கோப்பையை கைப்பற்றுமா என்பதை பார்ப்போம்.

மீண்டும் மன்கட் அவுட் செய்ய முயன்றாரா அஸ்வின் - டுவிட்டரில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

You'r reading பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பெங்களூரு மழையால் ரத்தான போட்டி வெளியேறியது பெங்களூரு அணி! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை