மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.
மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் நடைபெற்றது.இந்த இரு போட்டிகளில் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில், மழையால் போட்டி தடைபட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 22 ரன்கள் வித்தியாசத்திலும் மே.இ.தீவுகளை வெற்றி கண்டது இந்தியா. இதனால் 3 போட்டித் தொடரில் இரண்டில் வென்று தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மே.இ.தீவுகளில் உள்ள கயானாவில், இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. டி20 சாம்பியனாக உள்ள மே.இந்திய தீவுகள் அணி, அமெரிக்காவில் நடந்த முதல் இரு போட்டிகளில் தோல்வி கண்ட நிலையில், இன்றைய போட்டியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இதனால் 2 போட்டிகளில் கண்ட தோல்விக்கு ஆறுதலாக இன்று வெற்றி பெற மே.இ.தீவுகள் அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்வர் என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில், இந்திய அணியும் ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்பது நிச்சயம்.
ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இன்றைய போட்டியில், இளம் சுழல்பந்து வீச்சாளர் ராகுல் சகார், ஆல் ரவுண்டர் தீபக் சகார் போன்றோருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டி-20 போட்டி : மே.இ.தீவுகளை பந்தாடியது இந்தியா...! அறிமுகப் போட்டியில் அசத்திய 'சைனி'