உயிரை பணயம் வைத்து கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஓமலூர் அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்த ஆட்டை உயிரை பணயம் வைத்து தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கிராமம் எம். செட்டிப்பட்டி. அந்த ஊரை சேர்ந்த செல்வி நேற்று மாலை தனது நிலத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவற்றில் ஒரு ஆடு, அந்த பகுதியில் இருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து செல்வி தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்த போதிலும் இருட்டி விட்டது. இருப்பினும், ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரவு நேரம் என்றும் பாராமல் ஆட்டை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் ஆட்டை பத்திரமாக மீட்டனர். ஆட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினரை ஊர் பொதுமக்கள் பாராட்டு மழையில் நனைத்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்