Feb 2, 2019, 10:31 AM IST
லோக்சபா தேர்தலை முன்வைத்து திமுகவில் யுத்தம் வெடித்துக் கொண்டிருக்கிறது. பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் என திமுக சீனியர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோர் அடம்பிடிக்கிறார்களாம்.
Feb 1, 2019, 17:53 PM IST
அதிமுக கூட்டணி முடிவாகாததால் தமிழிசையைப் போலவே பெரும் பதற்றத்தில் இருக்கிறார் வானதி சீனிவாசன். கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகள் என்ற பெயரில், அடிக்கடி உலா வருகிறார்.
Feb 1, 2019, 17:43 PM IST
கோவையில் இருந்து வால்பாறை டாப்ஸ்லிப் வனப்பகுதிக்குக் கடத்தப்பட்ட சின்னத்தம்பி யானை, பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி கிராமத்துக்குள் வலம் வந்து கொண்டிருக்கிறது. மதுக்கரை மகாராஜா யானையை கும்கியாக மாற்றியது போல, சின்னத்தம்பியை மாற்றப் பார்க்கிறார்கள் எனக் கூக்குரல் எழுப்புகின்றனர் வன ஆர்வலர்கள்.
Feb 1, 2019, 17:34 PM IST
சுதா சேஷய்யனின் கட்டுரையை மையமாக வைத்தே இந்தக் கேள்விகளை எழுப்பிகின்றனர்.
Feb 1, 2019, 17:08 PM IST
சிஐடி காலனிக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வந்தபோது முன்னிலைப்படுத்தப்பட்டார் உதயநிதி. முரசொலி பவளவிழா நிகழ்ச்சியிலும் அவர் மேடையேறினார்.
Feb 1, 2019, 17:02 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிராம சபைக் கூட்டத்தை இன்று நடத்த இருக்கிறார் உதயநிதி. இதனால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுவதற்கும் நேற்று அவர் விளக்கம் கொடுத்திருந்தார்.
Feb 1, 2019, 09:53 AM IST
மத்திய, மாநில அரசின் உளவுத்துறையினர் கொடுத்த ரிப்போர்ட்டின்படி, பாமகவின் பார்கெய்ன் பவர் அதிகரித்துள்ளது.
Jan 31, 2019, 06:00 AM IST
கூட்டணி விவகாரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் மோதல் வெடித்திருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் முடிந்ததும், ' இனி திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை ' என்பது டாக்டர் ராமதாசின் சமீபகால சத்தியமாக இருந்து வருகிறது.
Jan 30, 2019, 16:43 PM IST
கொங்கு மண்டலத்தில் தருமபுரி தொகுதியை மட்டும் கொடுப்பது என அதிமுக தரப்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், அன்புமணிக்கு அதே தொகுதியைக் கொடுத்து வெற்றி பெற வைப்பதற்காக உழைப்போம் எனக் கூறிவிட்டனர்.
Jan 30, 2019, 16:41 PM IST
அதிமுக கூட்டணிக்குள் ராமதாஸை சேர்த்துக் கொள்வதில் கொங்கு மண்டல அமைச்சர்கள் எதிர்ப்பு காட்டுகிறார்களாம். இதுகுறித்து எடப்பாடியிடம் பேசிய அவர்கள், ராமதாஸை சேர்த்துக் கொள்வதில் நஷ்டங்களும் இருக்கின்றன. அவரை வரவேற்பதை மறுபரிசீலனை செய்யுங்கள். அவர் நம்மைக் காரணம் காட்டி திமுகவோடு பேரம் பேசுகிறார்.