Jan 11, 2019, 10:07 AM IST
இலங்கையில் போர் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், ரஷ்ய தயாரிப்பான அன்டனோவ்-32 விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இரண்டு பேருக்கு 185 வருட சிறைத்தண்டனையை விதித்துள்ளது நீதிமன்றம். Read More
Jan 10, 2019, 18:43 PM IST
இலங்கையில் புதிய அரசியல்சட்டத்தைக் கொண்டு வருவதற்காக நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள வரைவு நாளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read More
Jan 10, 2019, 18:01 PM IST
தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது, இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனுடன் இணைந்து, தாங்கள் ஆறு பேரே படுகொலை செய்தோம் என்று, இரண்டு சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். Read More
Jan 10, 2019, 12:54 PM IST
இலங்கையில் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகா ஒருவர், அதனை நிராகரித்திருக்கிறார். Read More
Jan 10, 2019, 12:33 PM IST
இலங்கை உச்சநீதிமன்றத்தின், நீதிபதியாக மலையகத் தமிழர் ஒருவர் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 9, 2019, 19:10 PM IST
இலங்கை இராணுவத்தின், இரண்டாவது நிலைத் தளபதி பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jan 9, 2019, 14:18 PM IST
எதிர்காலத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்கும் நோக்கில், பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது. Read More
Jan 9, 2019, 14:04 PM IST
தமிழக மீனவர்கள் எட்டுப் பேர், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே, இலங்கைக் கடற்படையினர் இவர்களைக் கைது செய்துள்ளனர். Read More
Jan 8, 2019, 19:05 PM IST
இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டி நகரில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தமது மூன்று குழந்தைகளையும் யன்னல் வழியாக தூக்கி வீசி விட்டு, தந்தையும் தாயும் கீழே குதித்து உயிர்தப்பினர். Read More
Jan 8, 2019, 17:18 PM IST
இலங்கையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தோன்றிய அரசியல் நெருக்கடி, டிசெம்பர் மாதம் முடிவுக்கு வந்ததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொள்வதாக, சபாநாயகர் அறிவித்திருந்தார். எனினும், 2015ஆம் ஆண்டு தொடக்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதாக முறைப்படி அறிவிக்காமல், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தமையினால் சர்ச்சை ஏற்பட்டது. Read More