4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த நடிகர்..

by Chandru, Feb 23, 2021, 18:19 PM IST

கொரோனா காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வேலை தேடி வந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தபோது அவர்கள் அனைவரையும் பஸ்களிலும் ரயில் மற்றும் விமானத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். சுமார் 7 லட்சம் பேர்களை அவர் இதுபோல் மீட்டிருக்கிறார். வடநாட்டுக் கிராமப் பகுதியில் பள்ளிக்கூடம் தூர மாக இருக்கிறது என்பதால் அந்த கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார்கள் என்பதை அறிந்து அந்த கிராமத்தில் உள்ள அத்தனை பேருக்கும் சைக்கிள் வாங்கி தந்தார்.

வெளிநாட்டில் டாக்டர் படிப்பு படிக்கச் சென்று திரும்பி வரமுடியாமல் இருந்தவர்களை அங்கிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலம் அழைத்து வந்தார். ஏர் உழுவதற்கு மாடு வாங்க முடியாமல் தனது மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கி தந்தார். இதுபோல் சோனு சூட் செய்த உதவி கணக்கிலடங்காதது. இன்னமும் உதவிகளைத் தொடர்ந்து வருகிறார் சோனு சூட். அவரது உதவி மனப்பான்மை அவரை மக்கள் மனதில் ஹீரோவாக பதிய வைத்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ள சோனு சூட் ஐதராபாத் வந்தார். படக்குழு வில் பல தொழிலாளர்கள் பணியாற்றினர். பலர் வறுமையில் இருந்த நிலையில் அவர்கள் பிள்ளைகள் ஆன்லைன் வகுப்புகளை செல்போன் இல்லாததால் பயில முடியவில்லை. இந்த தகவல் சோனு சூட்டுக்கு தெரிய வர அவர் படக் குழுவில் பணியாற்றிய 100 தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வாங்கி பரிசளித் தார். இந்த உதவியால் தங்களது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியும் என்று அவர்கள் கூறினார்கள்.உதவ வேண்டும் என்ற மனமிருந்தால் எந்த நேரத்திலும் உதவுவார்கள், அப்படிப்பட்ட உள்ளம் படைத்தவராக இருக்கிறார் சோனூ சூட். தற்போது ஒரு குடும்பத்தைத் தத்தெடுத்திருக்கிறார் சோனு. உத்தர்கணட்டில் சமோலி மாவடத்தில் நந்தா தேவி பனிப்பாரைக் கடந்த 2 வாரத்துக்கு முன் உடைந்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் மின் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டனர்.

பலர் மீட்கப்பட்டாலும் பலரைக் காணாமல் போனார்கள். இந்த சம்பவத்தில் ஆலம் சிங் பண்டிர் என்ற பணியாளர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவர் வருமானத்தை நம்பிதான் அவரது குடும்பம் இருந்துவந்தது. அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்ததை அறிந்து மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையறிந்து கவலை அடைந்த சோனு சூட் அந்த 4 குழந்தைகளையும் தத்தெடுத்துக்கொண்டிருக்கிறார். நான்கும் பெண்குழந்தைகள். அவர்களது படிப்பு செலவு முழுவதையும் சோனு சூட் ஏற்றார். மேலும் அந்த குடும்பம் தொடர்ந்து வாழ்வதற்கான வாழ்வாதார உதவியும் செய்ய உள்ளார். இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் மெஜேச் பகிர்ந்த சோனு.இன் இந்த குடும்பம் என்னுடையது என்றார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

You'r reading 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை