பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்

nellai parliament constitution candidate protest

by Suganya P, Apr 2, 2019, 01:00 AM IST

பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர் என நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 11-ம் தேதியில் தொடங்கும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 18-ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. நெல்லை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் இந்தியன் கட்சி வேட்பாளர்கள் என 26 பேர் களத்தில் உள்ளனர். ஆகையால், நெல்லையில் தேர்தல் பிரச்சார களம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.  

இந்நிலையில், நெல்லை தொகுதியில் காலிபிளவர் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு திடிரென உண்ணா விரதப் போராட்டத்தில் இறங்கினார். ‘வாக்கு சேகரிப்பதற்காக பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர். அதனால், உரிய நடவடிக்கை மாவட்ட நிர்வாக எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருக்க முயன்றார் பகவதிகேசன்.

இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர், அவரை அப்புறப்படுத்தினர்.

You'r reading பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர் Originally posted on The Subeditor Tamil

More Local news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை