கிராமப்புற மாணவர்களுக்கு இந்தியன் வங்கி வழங்கும் வேலைவாய்ப்பு பயிற்சி!

இந்தியன் வங்கி பயிற்சி நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பற்றவர்களுக்குச் சுயதொழில் தொடங்குவதற்கான இலவசப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சி நிறுவனம், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் மேற்பார்வையில், தமிழக அரசின் உதவியுடன், இந்தியன் வங்கியால் தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. தற்போது 30 நாள்களுக்கான இருசக்கர வாகன பழுது நீக்கம் பயிற்சியில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சியில் 35 பயிற்சியாளர்கள் மட்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்த ஆண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சிக்கான வயது 18 முதல் 45 வரை.சுயஉதவிக்குழுக்கள், வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பயிற்சிக் காலங்களில் காலை, மதிய உணவு, தேநீா், பிஸ்கட் போன்றவைகள் பயிற்சி நிறுவனத்தால் கட்டணமின்றி வழங்கப்படும். எனவே, சுயதொழில் தொடங்க ஆா்வம் உல்ள ஆண்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநா், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், டிரைசெம் கட்டடம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி என்ற முகவரியிலோ அல்லது 04343-240500, 7092225363, 7868865346, 9445989730, 9442247921 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

READ MORE ABOUT :