கிராமப்புற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

தமிழக அரசின், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம், அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கூடிய கணிணி இயக்குபவர் பணியிடத்திற்கு, பள்ளிப்படிப்பு மற்றும் தட்டச்சு முடித்த காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சார்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர்

தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை & மேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.9,000/-

விண்ணப்பிக்கும் முறை: தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை 26.12.2020 அன்று மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண். 317 K.T.S மணி தெரு,
மாமல்லன் நகர்,
காஞ்சிபுரம் – 631 502.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120825.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>