5 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை!

Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள 145 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில்:

திருவள்ளூர் - 20
ஊத்துக்கோட்டை – 28
ஆவடி – 6
பூந்தமல்லி – 17
திருத்தணி – 14
பள்ளிப்பட்டு - -1
ஆர்.கே.பேட்டை – 5
பொன்னேரி – 27
கும்மிடிப்பூண்டி – 27

என 145 கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.

இப்பணிக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம், நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி தகுதி:
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றால் வயது அதிகம் உள்ளோர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

வயது: 01-07-2020 ன் படி விண்ணப்பதாரர் 21 வயதினை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்ப மனுவினை பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ் நகல்களுடன் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தபால் மற்றும் நேரடியாக, வரும், 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/2021021240.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/2021021296-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>