இந்தியா விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Advertisement

இந்திய விளையாட்டு ஆணையத்திலிருந்து (SAI) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர், பயிற்சியாளர், மூத்த பயிற்சியாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 105

உதவி பயிற்சியாளர் - 35 காலியிடங்கள்

பயிற்சியாளர் - 35 காலியிடங்கள்

மூத்த பயிற்சியாளர் - 25 காலியிடங்கள்

தலைமை பயிற்சியாளர் - 10 காலியிடங்கள்.

கல்வி தகுதி:
SAI, NS, NIS நிறுவனத்தில் பயிற்சியாளர் துறையில் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தியா அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்டயபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் மற்றும் அனுபவம்: DoPt வழிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும்.

ஊதியம்:

உதவி பயிற்சியாளர்- Rs. 35,400- 1,12,400/- (Level – 6)

பயிற்சியாளர்- Rs. 56,100- 1,77,500/- (Level -10)

மூத்த பயிற்சியாளர்- Rs. 67,700- 2,08,700-(Level – 11)

தலைமை பயிற்சியாளர் - Rs. 78,800- 2,09,200/-(Level – 12)

வயது: அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: நேர்காணல்

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 31.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement

READ MORE ABOUT :

/body>