பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: பொறியாளர்

மொத்த பணியிடங்கள்: 4

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல்/ தகவல் தொழில்நுட்பவியல்/ கணிணி அறிவியல்/ மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேசிய தகுதி தேர்வு அல்லது கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.31,000/-

வயது: 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: விண்ணபத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/drdo-cas.JPG

Advertisement

READ MORE ABOUT :

/body>