இந்த படிப்பை முடித்திருந்தால் மத்திய அரசில் வேலை!

Advertisement

இந்திய அரசின் பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 9 பண அச்சடிப்பு மற்றும் முத்திரைத்தாள் அச்சடிப்பு நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த பணியிடங்கள்:54

பணியிடங்கள்: மேலாளர்( தொழில்நுட்பம்), செதுக்குபவர், இளநிலை அலுவலக உதவியாளர், இளநிலை பொன் அலுவல் உதவியாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர் ( மின்னியல்) .

கல்வி தகுதி: டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்பார்வையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ.26,000 - ரூ.1,00,000

வயது: 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

பணி: என்கிரேவர் -ஐஐஐ - 06

தகுதி: நுண்கலை பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,500 - 20,850

வயது: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: இளநிலை அலுவலக உதவியாளர் - 12

பணி: ஜூனியர் புல்லியன் அசிஸ்டன்ட் - 10

தகுதி: 55 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, ஆங்கிலம் தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8,350 - ரூ.20,470

வயது: 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: தகுதி மதிப்பெண், தட்டச்சுத் திறன், ஆன்லைன் எழுத்துத்தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம்.

கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.200 செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் ரூ.600 விண்ணப்ப கட்டணமாக இணையம் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.igmkolkata.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/Advt-for-Recruitment-to-54-Posts-in-Diff.-Categories-at-India-Govt-Mint,-Kolkata(A-Unit-of-SPMCIL).071db2f6-9046-4eeb-b476-169d0bdd2ded-(1).pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>