பத்தாம் வகுப்பு முடித்தவரா? இதோ உங்களுக்கான அரசு வேலை!

Advertisement

இராமேஸ்வரம் இந்து சமய அறநிலையத் துறையிலிருந்து காலியாக உள்ள கணினி இயக்குபவர், தட்டச்சர், நாதஸ்வரம், டிரைவர், Generator Operator, பெரியறை, பத்துவிளக்கு, சாதகாச்சாரி, உபகைங்கர்யம், மகன்யாசம், 2ம் நிலை சபையார், தீவெட்டி, திருச்சின்னம், திருமாலை கட்டி, தோப்பு காவல் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 23.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 27

கல்வி தகுதி: குறைந்தபட்சம் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.11,600/- முதல் ரூ.1,12,400/- வரை.

வயது: 18 முதல் 35 வயது வரை.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் 23.02.2021க்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,
இராமேஸ்வரம் - 623 526.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2021/02/PaperNewswebsite.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>