இன்கமிங் கால்களை நிறுத்தக் கூடாது: டிராய் எச்சரிக்கை!

TRAI pullsup Airtel Vodafone recharge scheme

by Devi Priya, Nov 30, 2018, 18:25 PM IST

மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களின் இன்கம்மிங் கால்களை நிறுத்தக் கூடாது என செல்போன் நிறுவனங்களுக்கு, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜியோ நிறுவனம் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும், அதே சமயம் இந்நிறுவனம் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதால் மற்ற நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட பிற மொபைல்போன் சேவை நிறுவனங்களுக்கு வருவாய் இழக்க ஏற்பட்டுள்ளது. 

எனவே, வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.35 க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இன்கம்மிங் அழைப்புகளை பெற முடியும் என அறிவித்தன. இது வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்க்கு புகார்கள் குவிந்தன.

இதையடுத்து, குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்தக் கூடாது என டிராய் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 3நாட்களுக்கு முன்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் என்று டிராய் அமைப்பு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

You'r reading இன்கமிங் கால்களை நிறுத்தக் கூடாது: டிராய் எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை