4வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக்: காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு

Jul 23, 2018, 10:01 AM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4 வது நாளாக நடைபெற்று வரும் லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் மாற்றம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வெள்ளிக் கிழமை முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்றுடன் நான்காவது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோயம்பேடு சந்தையில் தக்காளி, உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் உள்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

காலவரையற்ற வேலை நிறுத்தம் எதிரொலியால் நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள், வேன்கள் ஓடவில்லை. தமிழகத்தில் மட்டும் 4 1/2 லட்சம் கனரக வாகனங்களும், 1 1/2 லட்சம் மினி வேன்கம் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading 4வது நாளாக தொடரும் லாரிகள் ஸ்டிரைக்: காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை