Feb 18, 2019, 18:57 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் அறிவிப்பு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த கட்சிகளுக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணியில் சில பேரங்களும் இருக்கின்றன என்கிறார்கள் மக்கள் மன்ற பொறுப்பாளர்கள். மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக நேற்று அறிவிப்பு வெளியிட்ட ரஜினி, வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. தமிழக சட்டமன்ற தேர்தல் தான் எங்களது இலக்கு.
Feb 18, 2019, 18:48 PM IST
மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வ வேண்டும் என்பதில் காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர். கடந்த தேர்தலில் தருமபுரியில் வெற்றி பெற்ற அன்புமணி, இந்தமுறை அதே தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Feb 18, 2019, 18:32 PM IST
சேலம் மாவட்டத்தில் போட்டி இடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார் சுதீஷ். அதை கேட்ட தமிழிசை எட்டு தொகுதியில் எதிர்பார்ப்பதெல்லாம் ஓவர் என்றாராம்.
Feb 16, 2019, 18:21 PM IST
கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொள்முதல் செய்யப்பட்ட அந்தப் பெரும் சொத்தைப் பற்றித்தான் திராவிடக் கட்சிப் பிரமுகர்கள் கூடிக் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர். செட்டிநாட்டு அரசரின் உதவியாளராக இருந்தவர், ஒரு சாதாரண கிளர்க்காகத்தான் அவரிடம் பணிக்குச் சேர்ந்தார்
Feb 15, 2019, 13:27 PM IST
40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு வலிமையாக இருக்கிறோம் எனப் பேட்டி கொடுத்திருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன். இதனால் அதிர்ச்சியில் உள்ளனர் மாவட்ட பொறுப்பாளர்கள்.
Feb 12, 2019, 19:42 PM IST
தினகரனுக்கு எதிராக இன்னும் கலக மனநிலையில் இருக்கிறார்கள் இளவரசியின் வாரிசுகள். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் என கஜானா சாவியை அவர்கள் கொத்தாக வைத்திருப்பதால், கடும் மனஉளைச்சலில் இருக்கிறார் தினகரன்.
Feb 12, 2019, 19:34 PM IST
பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் அழைப்பது எங்கள் சுயமரியாதைக்கே இழுக்கு' எனக் கூறி, இந்த இரண்டு கட்சிகளையும் ஓரம்கட்டினார் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா. இந்தக் கருத்துக்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா.
Feb 12, 2019, 19:25 PM IST
அதிமுக கூட்டணிக்குள் பாமக இருந்தால், தேமுதிகவுக்கு வெற்றி கிடைக்குமா என அக்கட்சியினர் விவாதம் செய்து வருகின்றனர். இதைப் பற்றிப் பேசும் அக்கட்சி பிரமுகர்கள், ' மோடி அலை வீசிய 2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக நிறுத்திய 14 வேட்பாளர்களில் வன்னியர்கள் யாரும் இல்லை.
Feb 12, 2019, 19:13 PM IST
மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். கடந்த தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம் என அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கூறியிருப்பதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார் தமிழிசை.
Feb 12, 2019, 19:00 PM IST
கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் அறிவிப்போம் எனப் பேட்டி கொடுத்திருந்தார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி. திமுக, அதிமுக, அமமுக என ஒரே நேரத்தில் மூன்று கட்சிகளுடன் பாமக பொறுப்பாளர்கள் கூட்டணிப் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றனர்.