5 வயது சிறுமி வன்கொடுமை - முதல்வர் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரம்!

பொள்ளாச்சில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் 5 வயது சிறுமி ஒருவர் காமக் கொடூரன் ஒருவனால் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பனங்காடு காலணியை சேர்ந்தவர்கள் இளையராஜா - கவிதா தம்பதியினர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். கூலித் தொழிலாளிகளான இளையராஜாவும், கவிதாவும் நேற்று காலை தன் மகளை அருகில் உள்ள அங்கன்வாடியில் விட்டு விட்டு இருவரும் வேலைக்குச் சென்று விட்டார்கள்.

வேலை முடித்து மாலை வீட்டிக்கு வரும்போது, சிறுமி அழுது கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்து அருகில் போய் விசாரித்த பெற்றோர்களுக்கு அருகில் அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமியின்  உதட்டில் காயம் இருப்பதும், குழந்தையின் பெண் உறுப்பில் இரத்தம் வடிந்து கொண்டிருப்பதையும் குழந்தை எழுந்து நடக்க முடியாததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பிறகு குழந்தையிடம் விசாரித்த போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பிரகாசம் மகன் கெளதமன் என்பவர் குழந்தையை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. குழந்தையின் உடல்நிலை குறித்து பெற்றோர் பதற்றம் அடைந்தார்கள்.

உடனே ஓமலூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தார்கள். குழந்தையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிறப்பு உறுப்பில் இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்கிறது. அதனால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லுமாறு கூறினார். அதையடுத்து குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஓமலூர் காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடமும், பனங்காட்டிலும் தீவிர விசாரணையை மேற்கொண்டார்கள். பிறகு மது போதையில் இருந்த கெளதமனை இன்று மதியம் ஓமலூர் போலீஸார் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்