பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் உள்ள தேசிய இரசாயன ஆய்வகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 45

பணி: Sr. Technical Officer - 02
சம்பளம்: மாதம் ரூ.1,00,136

பணி: Sr. Technical Officer (1)/Fire Safety Officer - 01

சம்பளம்: மாதம் ரூ.84,360

பணி: Technical Officer- 12

சம்பளம்: மாதம் ரூ.65,096

பணி: Technical Assistant - 10

சம்பளம்: மாதம் ரூ.52,176

பணி: Technician - 20
சம்பளம்: மாதம் ரூ.29,200

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல், கெமிக்கல், பையர் மற்றும் சேப்டி பிரிவில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ., எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்

கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும் மற்ற அனைத்து பிரிவினருக்குக் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.ncl-india.org

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/11/NCLTECHNICALADVT012020.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>