மத்திய அரசாங்கத்தில் வேலை!

by Loganathan, Feb 15, 2021, 20:22 PM IST

மத்திய அரசு தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள உதவி இயக்குநர், இணை உதவி இயக்குநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 04.03.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 4

கல்வி தகுதி:

உதவி இயக்குநர்: பட்டய கணக்காளர் / செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் / நிறுவன செயலாளர் / பட்டய நிதி ஆய்வாளர் / முதுகலை டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் (நிதி) / வணிக நிர்வாகத்தில் முதுகலை (நிதி) / வணிக பொருளாதாரத்தில் முதுகலை / வணிகத்தில் முதுகலை / இளங்கலை சட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இணை உதவி இயக்குநர்: இணை உதவி இயக்குநர் பணியிடங்களுகு இளங்கலை சட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்: 1-2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதியம்:

உதவி இயக்குநர் : Level-07

இணை உதவி இயக்குநர் : Level-08

வயது: 30 வயது வரை

கட்டணம்: ரூ.25/-

தேர்ந்தெடுக்கும் முறை: பட்டியல் தயாரிப்பு மற்றும் நேர்காணல்.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 04.03.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யவும் https://www.upsconline.nic.in/

https://tamil.thesubeditor.com/media/2021/02/Advt-No-03-2021-engl.pdf

You'r reading மத்திய அரசாங்கத்தில் வேலை! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை