ஆந்திர முதலமைச்சருக்கு பிடிவாரண்ட்: துர்ஹமபாத் நீதிமன்றம் அதிரடி

Sep 14, 2018, 09:45 AM IST
மகாராஷ்டிர மாநிலம், பாப்லி அணையை பார்வையிட தடையை மீறி நுழைந்த வழக்கில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாயு நாயுடுவை கைது செய்ய துர்ஹமபாத் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கோதாவரி ஆற்றின் குறுக்கே நான்ந்டெட் பகுதியில் மகாராஷ்டிரா அரசு பாப்லி என்ற அணையை கட்டியது. 2010-ம் ஆண்டு இந்த அணை கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு (தற்போது ஆந்திர முதலமைச்சர்) தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் அணைய முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தார். 
 
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில அரசு அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. தடையை மீறி அணையை பார்வையிட முயன்ற சந்திரபாபு நாயுடு உள்பட 30 எம்.எல்.ஏ.க்கள் 8 எம்.பி.க்கள் ஆகியோர் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் பல முறை சந்திரபாபு நாயுடு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. 
 
அவர் ஆஜர் ஆகாததால் வரும் 21ஆம் தேதிக்குள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுவை கைது செய்ய வேண்டும் என்று துர்ஹமபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதுகுறித்து, அமராவதியில் பேசிய ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான நாராலோகேஷ், இந்த விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

You'r reading ஆந்திர முதலமைச்சருக்கு பிடிவாரண்ட்: துர்ஹமபாத் நீதிமன்றம் அதிரடி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை