பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Sep 24, 2018, 12:22 PM IST

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாத ஊதியமாக 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது.சம்பளத்தை உயர்த்த வேண்டும் ,பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மற்ற ஆசிரியர்களுக்கு இருப்பது போல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த போராட்டத்தின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பகுதி நேர ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். வாக்குறுதி நிறைவேற்றப்படாததால், பகுதி நேர ஆசிரியர்கள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'அண்டை மாநிலங்களில் கணிசமான அளவிற்கு ஊதிய உயர்வும், பணி நிரந்தரம் கூட செய்யப்படடுவதாகவும், ஆனால் தமிழகத்தில் மட்டும் குறைந்த அளவு ஊதியம் வழங்கப்படுகிறது" எனவும் குற்றம்சாட்டினர்.

தங்களது நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

You'r reading பகுதிநேர ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை