கைக்குழந்தையை தூக்க தெரியாமா தவீக்கிறீர்களா? இதோ தீர்வு.

Do you know how to lift the baby? Heres the solution.

Oct 20, 2018, 15:41 PM IST

குழந்தைகள் என்றாலே ஒரு தனி சந்தோசம், உற்சாகம் நமக்கு தானாக பிறந்துவிடும். அப்படி கைக்குழந்தைகளை நாம் பார்க்கும் போது தூக்க வேண்டும், செல்லமாக விளையாட வேண்டும்  என்ற ஆர்வமும் ஆசையும் நமக்கு எழுவதும் உண்டு. அதை ஒரு மாதிரி நாம் நிறைவேற்றுவதும் உண்டு.

ஆனால் கைக்குழந்தைகள் விஷயத்தில் 100 சதவீதம் கவனமாக இருக்கவேண்டும். சிலர் தங்கள் ஆசைக்கு குழந்தைகளை விரும்பம் போல் கையாள்வார்கள். ஆனால் அதுதான் ஆபத்தில் கொண்டு சென்று நிறுத்தும்.

பிறந்த சில மாதங்களுக்கு குழந்தையின் தலை சரியாக நிற்காமல் இருக்கும். இந்த பருவத்தில் குழந்தையை சட்டென்று தூக்குதல் மிகப்பெரிய ஆபத்தான செயல்.

அதே நேரம் குழந்தையைச் சரியாகத் தூக்காமல்போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு, வலி போன்ற கஷ்டங்கள் வந்துவிடும். இப்படி வந்தால் எங்களில் பலர் உடனே சுய மருத்துவம் செய்ய தொடக்கி விடுவார்கள். ஆனால் இப்படி செய்தல் ஆகாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அத்துடன் குழந்தையைத் தூக்கும்போது, நம் கைகளை நேராக அகட்டி, குழந்தையின் கழுத்தையும், தலையையும் பிடிமானம் கொடுத்தே தூக்க வேண்டும். இதை பலர் சரியாக செய்வதில்லை.

மீண்டும் கை அணைப்பில் இருந்து இறக்கி, படுக்கவைக்கும்போது, தலையையும், கழுத்துப்பகுதியையும் ஒன்றாகக் கையால் பிடித்தபடி, மெதுவாக இறக்கவேண்டும்.

இப்படி குழந்தைகள் விஷயத்தில் நாம் நிறைந்த கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் பாரதூரமான பிரச்சசினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வந்து விடும்.

You'r reading கைக்குழந்தையை தூக்க தெரியாமா தவீக்கிறீர்களா? இதோ தீர்வு. Originally posted on The Subeditor Tamil

More Lifestyle News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை