அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் விஜய் ரசிகர்கள்- வைரல் வீடியோ
Vijay Fans issue death threat to TN Ministers
சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக அரசை கடுமையாக விமர்சிக்கிறது சர்கார் திரைப்படம் என்பது அமைச்சர்கள் குற்றச்சாட்டு. இதனால் சர்கார் திரைப்படத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக சர்கார் தரப்பு அறிவித்தது. இதன்படி சர்கார் மறுதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் அரிவாள்களை காட்டி அமைச்சர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ, இலவச லேப்டாப்புகளை உடைப்பது, இலவச மின்விசிறியை தீயிலிட்டு எரிப்பது என விஜய் ரசிகர்கள் பதிவிட்டிருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
You'r reading அமைச்சர்களுக்கு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுக்கும் விஜய் ரசிகர்கள்- வைரல் வீடியோ Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News