குப்பையில் தங்கத்தை வீசி சென்ற பயணி: அதிர்ச்சியில் அதிகாரிகள்

Jul 6, 2018, 19:05 PM IST

இந்தியாவில் நாளுக்கு நாள் கடத்தல் தங்கம் என்ற ஒரு செய்தி அதிகரித்து கொண்டே வருகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் இந்தியாவில் தங்கத்துக்கான சுங்கவரி அதிகமாக வசூலிக்கப்படுவதே.

பல வித்தியாசமான முறைகளில் தங்க நகைகள், தங்க கட்டிகள் கடத்தபட்டு வருகின்றன. அதில் எலக்ட்ரானிக் பொருட்களுக்குள் தங்கம், காலனியில் தங்கம், கைபேசி, கொஞ்சம் மேலே சென்று வயிற்றுக்குள் தங்கம் கடத்தல் போன்ற செய்திகளும் அவ்வப்போது நம் காதுகளுக்கு வந்து செல்கிறது.

தற்போது ஒரு புது விதமாக தங்கத்தை கடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டி ஒன்றில் மர்ம பொட்டலம் ஒன்று விமான நிலைய அதிகாரிகளின் கண்களில் தென்பட்டது.

கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் இருந்த அந்த பையை ஆராய்ந்தால் அதில் 2.8 கிலோ கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருந்தன.

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ஒரு சில, பெங்களூரு நின்று செல்லும், அதில் பயணம் செய்யும் பயணிகள் ஒய்வு எடுக்க பெங்களூரு விமான நிலைய காத்திருப்போர் பகுதியில் தங்கவைக்கப்படுவர். அவ்வாறு தங்கும் பயணிகளில் சிலர் தங்கத்தை கடத்தி வந்து இங்கு இருக்கும் குப்பைத்தொட்டியில் வீசி சென்று விடுகின்றனர்.

இப்படி வீசிய தங்க கட்டிகளை, குப்பைத்தொட்டியை சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூலம் அங்கிருந்து எடுத்து தரகர்கள் மூலம் சேர வேண்டிய இடத்திற்கு சேர்த்துவிடுகின்றனர். அதற்கென ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பணத்தை பெற்றுக்கொள்வார்கள்.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 87 லட்சம் ஆகும். கைப்பற்றப்பட்ட தங்கம் யார் கொண்டு வந்து குப்பைத்தொட்டியில் வீசி சென்றனர் என்பது குறித்து பெங்களூரு விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading குப்பையில் தங்கத்தை வீசி சென்ற பயணி: அதிர்ச்சியில் அதிகாரிகள் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை