நயன்தாராவின் அதிரடி நடிப்பில் இமைக்கா நொடிகள் டிரைலர் ரிலீஸ்

by Isaivaani, Jun 27, 2018, 18:13 PM IST

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். சைக்கோ திரில்லர் படமான இதில், நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார்.

டிமாண்டி காலனி படத்தின் வெற்றிக்கு பிறகு அஜய் ஞானமுத்து இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில், நயன்தாராவுடன் அதர்வா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், இமைக்கா நொடிகள் படத்தின் டிரைலர் ரிலீசாகி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இமைக்கா நொடிகள் படத்தின் டிரைலர் இதோ..

You'r reading நயன்தாராவின் அதிரடி நடிப்பில் இமைக்கா நொடிகள் டிரைலர் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை