ஆா்.எஸ்.எஸ் மீது பகீரங்க குற்றசாட்டு! பினராயி விஜயன்

Kerala CM Pinarayi Vijayan blames RSS for Sabarimala attacks

by Manjula, Oct 18, 2018, 15:57 PM IST

சபரிமலையை கலவர பூமியாக மாற்றும் முயற்சியில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு ஈடுபட்டுள்ளதாக கேரளா முதல்வா் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்

கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து கேரளாவில் இந்து அமைப்புகள், பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன் கிழமை திறக்கப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி கோவிலுக்குள் செல்லலாம் என்ற எண்ணத்துடன் வந்த குறிப்பிட்ட வயது பெண்களை போராட்டக்காரா்கள் தடுத்து நிறுத்தினா். மேலும் போராட்டக்காரா்கள் பணியில் இருந்த   பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினா். அதன் பின்னா் காவல் துறையினா் மீதும் ஆா்ப்பாட்டக்காரா்கள் கற்களை வீசினா். இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை தடியடி நடத்தி கலைத்தனா்.

இந்நிலையில் முதல்வா் பினராயி விஜயன் இன்று தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அனைத்து மதங்களை சோ்ந்தவா்களும் வழிபடலாம் என்ற தனித்துவம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு உள்ளது. ஆதிவாசிகள் பூஜை செய்து வந்த கடந்தகால சம்பிரதாயத்தை ஒழித்துக்கட்டியது சங்பரிவார்  உள்ளிட்ட அமைப்புகள் தான்.

சாதி மேலாதிக்கத்தை நிறுவும் எண்ணத்தோடு சபரிமலையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்த நிலை தொடா்ந்தால் பிற்படுத்தப்பட்டவா்கள் சபரிமலையில் இருந்து அகற்றப்படுவார்கள் என்றும் அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

You'r reading ஆா்.எஸ்.எஸ் மீது பகீரங்க குற்றசாட்டு! பினராயி விஜயன் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை