மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு

by Balaji, Feb 19, 2021, 19:05 PM IST

தமிழக அரசின் மீன்வளத்துறையில் 'சகர் மித்ரா' என்ற பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் 608 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., (மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல்) முடித்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் துறையில் அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் ரூ. 10 ஆயிரம். மேலும் ஊக்கத்தொகையாக ரூ. 5000 வழங்கப்படும்.

எந்தப்பகுதி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, துாத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர, அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அரசு மற்றும் மீனவர்களுக்கு இடையே தொடர்பை ஏற்படுத்துதல், அரசின் திட்டங்களை மீனவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல், மீன்களைச் சுத்தமாகக் கையாளும் விதத்தை எடுத்துரைப்பது இவர்களின் பிரதான பணி.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

கடைசிநாள்: 19.2.2021.

விபரங்களுக்கு: www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_-_Sagar_Mitra_-_Notification.pdf

You'r reading மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Employment News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை