என்னம்மா இதெல்லாம் ஒரு டிரஸ்சாம்மா.. இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் பபுள் வ்ராப் உடை!
ASOS Sells Bubble Wrap Dress for £68 Get Trolled by Social Media
மின்சாதன பொருட்கள் வாங்கும் போது அதன் மேல் பாதுகாப்புக்காக போட்டு வைக்கப்படும் Bubble Wrap-ஐ, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த பிளாஸ்டிக் முட்டைகளை உடைத்து விளையாடுவார்கள். அந்த மெட்டீரியலில் புதிய ஃபேஷன் உடை வந்து சந்தைக்கு வந்துள்ளது.
பிரிட்டன் ஆன்லைன் ஃபேஷன் மற்றும் காஸ்மெடிக் நிறுவனமான ASOS வடிவமைத்துள்ள இந்த புதிய பபுள் வ்ராப் உடையை இணையத்தில் பார்த்த நொடியில் இருந்து நெட்டிசன்கள் மீம்ஸ்களாக குவித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
உடல் தெரியும் படி சீ த்ரூ ஆடையாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடை பீச்களுக்கு பிகினியில் செல்லும் பெண்களுக்கு ஏற்ற உடை என ASOS விளம்பரம் செய்து வருகிறது.
மேலும், இதன் விலை 68 பவுண்டுகள். அதாவது இந்திய மதிப்பில் 6,180 ரூபாயாம். என்னங்கடா பொருள் மேல் போட்டு வைக்கும் பிளாஸ்டிக் கவரை ஆடை ஆக்கி, அதுக்கு நூடுல்ஸ் ஸ்ட்ராப்களை கட்டி தொங்கவிட்டு, இதை ஃபேஷன் என சொல்கிறீர்கள் என ட்ரோல் செய்து வருகின்றனர்.
ஆனால், இதையும் ஃபேஷன் விரும்பிகள் வாங்கி செல்வது தான் அனைத்திலும் விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
You'r reading என்னம்மா இதெல்லாம் ஒரு டிரஸ்சாம்மா.. இணையத்தில் ட்ரோல் செய்யப்படும் பபுள் வ்ராப் உடை! Originally posted on The Subeditor Tamil
More Lifestyle News