தேர்தல் ஜூரமா? ரியல் ஜூரமா? குஷ்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
Khushbu Sundar Admits in Hospital but netizens troll her
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தான் மருத்துவமனையில் சேர்ந்துள்ளதாகவும் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கையில் பாஜகவினர் உற்சாக கொண்டாட்டங்களில் இருந்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினரான குஷ்பு, இன்று எந்த செய்தி சேனல்களிலும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. நிறைய நிகழ்ச்சிகளில் கமீட் ஆகியிருந்தும், உடல்நிலை கடைசி நேரத்தில் சரியில்லாமல் போனதால், அனைத்தையும் மிஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவுக்கு கீழே பலரும் சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் என்று பதிவிட்டாலும், விஷமக்கார நெட்டிசன்கள் சில பேர், தேர்தல் ஜூரத்தினால் மருத்துவமனையில் ஒளிந்து கொண்டீர்களா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
You'r reading தேர்தல் ஜூரமா? ரியல் ஜூரமா? குஷ்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்! Originally posted on The Subeditor Tamil
More Politics News