சமாதானமான மமதா பானர்ஜி.. எதிர்க்கட்சிகளின் கொல்கத்தா சங்கமத்துக்கு திமுகவுக்கும் அழைப்பு
Mamata today invites to DMK for Kolkata Rally
மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் - திமுக வுக்கு அழைப்பில்லை!
பாஜகவின் ஸ்லீப்பர் செல்லா? திமுகவை புறக்கணித்த மமதா- டெல்லி அரசியலில் பரபரப்பு!
தேசியக் கட்சி தலைவர்கள் சமாதான முயற்சிகளை ஏற்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுகவையும் மமதா பானர்ஜி அழைத்திருப்பதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி எதிர்க்கட்சிகளின் சங்கமம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு நேற்று மமதா பானர்ஜி பேட்டியளித்தார்.
அப்போது சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைவர்கள், கட்சிகள் பட்டியலை மமதா அறிவித்திருந்தார். அதில் திமுக இடம்பெறவில்லை. இது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்பட்டிருந்தது.
இது தொடர்பாக நாம் முதன் முதலாக செய்தியை வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் மமதாவின் புறக்கணிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ள திமுக, தேசியத் தலைவர்கள் மூலம் மமதாவை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.
தற்போதைய தகவல்களின் படி, தேசியத் தலைவர்களின் சமாதான முயற்சிகளை ஏற்றுக் கொண்டு திமுகவுக்கும் கொல்கத்தா சங்கமத்துக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளாராம்.
You'r reading சமாதானமான மமதா பானர்ஜி.. எதிர்க்கட்சிகளின் கொல்கத்தா சங்கமத்துக்கு திமுகவுக்கும் அழைப்பு Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News