விஷக்கிருமி தினகரனை மன்னிக்க மாட்டேன்... திவாகரன் காட்டம்
Divakaran slams Dinakaran
விஷக்கிருமியான அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனை ஒருபோதும் மன்னிக்கமாட்டேன் என அண்ணா திராவிடர் கழகத்தின் நிறுவனத் தலைவர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் திவாகரன் கூறியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் சிறப்பானது. விவசாயிகளுக்கு ரூ6,000 என்பது மிகவும் குறைவானது.
அதிமுகவில் அனைவரும் இணைய வேண்டும். இதற்கு அண்ணா தி.க. நிச்சயம் தடையாக இருக்காது.
காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவது சரி அல்ல. பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க முயற்சிக்கவில்லை.
விஷக்கிருமியாக இருக்கும் தினகரனை நிச்சயம் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.
இவ்வாறு திவாகரன் கூறினார்.
You'r reading விஷக்கிருமி தினகரனை மன்னிக்க மாட்டேன்... திவாகரன் காட்டம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :