முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை? உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

by Balaji, Nov 30, 2020, 19:42 PM IST

நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கர்ணன் ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டு வந்தார்.

இதையடுத்து கர்ணன் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதில் கர்ணனை நேரடியாக வரவழைத்து, விசாரணை நடத்தியதாகவும், அந்த விசாரணையின் போது இனிமேல் இது போன்ற வீடியோக்களை வெளியிட மாட்டேன் என்று கர்ணன் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினர். இது குறித்து, தமிழக டிஜிபி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் ஆகியோர் வரும் டிசம்பர் 7-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

You'r reading முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை? உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை