நாளைய முதல்வரே... விஜய்யை வாழ்த்தும் போஸ்டர்...
விஜய்யை வாழ்த்தும் போஸ்டர்...
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளைய முதல்வரே என்று நெல்லையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நடிகர் விஜய், தனது 44வது பிறந்தநாளை வரும் 22ஆம் தேதி கொண்டாடுகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ரசிகர்கள் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் விஜய் அறிவித்திருந்தார்.
இருப்பினும், விஜயின் நெல்லை மாவட்ட ரசிகர்கள் விளம்பர பதாகைகளை ஓட்டியுள்ளனர். அதில் 'நாளைய முதல்வரே' என் வாசகம் இடம்பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றப் படம், அந்த போஸ்டரில் உள்ளது.
கமல்,ரஜினியை தொடர்ந்து விஜயின் அரசியல் பயணமும் துளிர் விட்டுள்ளது என கருதப்படுகிறது.
You'r reading நாளைய முதல்வரே... விஜய்யை வாழ்த்தும் போஸ்டர்... Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News
READ MORE ABOUT :