பட்டேல் சிலை தமிழ் பிழை! தமிழ் மக்கள் அதிருப்தி.

Patel statue:Name board carries wrong Tamil translation

by Manjula, Oct 31, 2018, 14:29 PM IST

நா்மதை நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சா்தாா் வல்லபாய் படேல் சிலையை பிரதமா் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். படேல் சிலை அருகே தவறாக மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு சர்ச்சையாகி உள்ளது.

சா்தாா் சரோவா் அணை அருகே 182 மீட்டா் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள வல்லபாய் படேல் சிலையை பிரதமா் நரேந்திர மோடி வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று (31ம் தேதி) திறந்துவைத்தார். விழாவை முன்னிட்டு இந்திய விமானப்படையின் கண்கவா் சாகச நிகழ்ச்சிகள், கலாசாரம் தொடா்பான நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது.

இந்நிலையில். இந்த சிலைக்கு கீழே பல்வேறு மொழிகளில் ஸ்டாட்சூ ஆப் யூனிட்டி என்ற சிலையின் பெயர் மொழிப்பெயர்க்கப்பட்டு இருந்தது. அந்த வரிசையில் தமிழ் மொழியின் மொழிப்பெயர்ப்பு மிகவும் மோசமாக இருப்பதால் சர்ச்சையாகி உள்ளது.

டிஜிட்டல் இந்தியா என்று பெருமிதம் பெற்றுக் கொள்ளும் பாஜகவினர் ஆன்லைன்யில் மொழிப்பெயர்ப்பு செய்து இருந்தால் கூட ஒற்றுமையின் சிலை என வந்திருக்கும் ஆனால், "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி" என மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள் இந்த தவறு வெளியே தெரிந்து கண்டனங்கள்
வந்த நிலையில் அவசர அவசரமாக தமிழ் மொழிபெயர்ப்பை மட்டும் அழித்துள்ளனர். இந்த செயல் தமிழ் மக்கள் மற்றும்  தமிழ் மக்கள் ஆர்வளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த தவறு கூறித்து பேசிய பாஜக நிர்வாகிகள் "தவறு செய்வது மனித இயல்பானதுதான். இதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்" என்கின்றனர்.

தமிழ் வளா்ச்சித்துறை அமைச்சா் பாண்டியராஜன், அமைச்சா் கடம்பூா் ராஜூ ஆகியோா் இந்த விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.

You'r reading பட்டேல் சிலை தமிழ் பிழை! தமிழ் மக்கள் அதிருப்தி. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை