சிவகார்த்திகேயன் படத்திலிருந்து பின்வாங்கிய விக்னேஷ் சிவன்!

by Rahini A, Mar 19, 2018, 17:26 PM IST

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்திலுருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளார்.

24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சீமராஜா'. இதன் பின்னர் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேய நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

ஆனால், தற்போது இப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகுவதாக அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் படத்துக்குக் கொடுத்த கால அளவைவிட படத்தை விரைந்து முடிக்க தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவித்ததால் விக்னேஷ் சிவன் விலகியுள்ளார்.

'அவசரகதியில் ஒரு திரைப்படத்தை கமர்ஷியல் காரணங்களுக்காக முடித்துக் கொடுத்தால் அது தன் கரியரையே பாதித்துவிடும்' என எண்ணியதால் அப்படத்திலிருந்து விலகிக்கொள்வதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இதையடுத்து தயாரிப்பாளர் தரப்பு இயக்குநர் ராஜேஷிடன் கால்ஷீட் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிவகார்த்திகேயன் படத்திலிருந்து பின்வாங்கிய விக்னேஷ் சிவன்! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை