அமைரா தஸ்தூர் பாலியல் குற்றச்சாட்டு- யார் அந்த தென்னிந்திய நடிகர்! #MeToo

MeToo Harassment Amyra Dastur

Oct 13, 2018, 14:09 PM IST

தனுஷின் அநேகன் படத்தில் நாயகியாக அறிமுகமான அமைரா தஸ்தூர், தனக்கும் சினிமா துறையில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறியுள்ளார்.

Amyra Dastur

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அநேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், தென்னிந்திய நடிகர் ஒருவர், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக புதிய மீடூ வெடிகுண்டை வீசியுள்ளார்.

ஆனால், ஆள் யார் என்பதை கூற அமைரா தஸ்தூர் மறுத்துவிட்டார். மீடூ விவகாரத்தில் வெளிப்படையாக பாலியல் புகார்களை பெண்கள் கூற துவங்கி உள்ளனர். சரியான ஆதாரம் மற்றும் பெயர்களை கூற ஏன் தயங்குகின்றனர் என தெரியவில்லை.

தென்னிந்திய நடிகர் என்பதால், யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் தனுஷுக்கு ஜோடியாக அநேகன் படத்தில் அறிமுகமான அமைரா தஸ்தூர், சந்தானத்துடன் ’ஓடி ஓடி உழைக்கணும்’ படத்திலும் கமீட் ஆனார். மேலும், தெலுங்கில் ராஜு காடு என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஜ் தருண் நடித்துள்ளார்.

இந்த மூவரில் ஒருவரா அல்லது வேறு ஒரு நபரா என்பதை அமைரா விளக்காமல் விட்டதால், சமூக வலை தளங்களில் இந்த மூவரின் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You'r reading அமைரா தஸ்தூர் பாலியல் குற்றச்சாட்டு- யார் அந்த தென்னிந்திய நடிகர்! #MeToo Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை