ஜெகன்மோகன் ரெட்டியின் உதவியாளர் எனக் கூறி பல லட்சம் மோசடி..! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது

4 youths misuse Jagan mohan name

Jun 20, 2019, 15:48 PM IST

விசாகப்பட்டினம் காவல்துறை துணை ஆணையர் மகேஷ் சந்திரா லட்டா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் உதவியாளர்கள் என கூறி தற்போதைய எம்.எல்.ஏ முன்னாள் எம்எல்ஏ என பலரிடம் மோசடியில் ஈடுபட்டு பணம் பெற்று ஏமாற்றி வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

மே 7-ம் தேதி தெலுங்குதேச கட்சியின் பெந்துர்த்தி தொகுதி எம்எல்ஏ சத்திய நாராயணவை தொடர்பு கொண்ட நபர், தாம் சந்திரபாபு நாயுடு உதவியாளர் ஸ்ரீநிவாஸ் பேசுவதாகவும், உடனடியாக 10 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் இரவு சந்திரபாபு நாயுடு போன் செய்வார் என்று பேசியுள்ளார்.

இதையடுத்து சத்யநாராயண தனது டிரைவர் சன்னியாசி நாயுடு மூலமாக பணத்தை அவர்கள் கூறிய முகவரிக்கு சென்று வழங்கினர். பின்னர் முதல்வரின் உதவியாளர் ஸ்ரீனிவாசக்கு போன் செய்து நீங்கள் கூறியபடி பணத்தை வழங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் பணம் கேட்டு நான் போன் செய்யவில்லை என ஸ்ரீனிவாஸ் சத்தியநாராயணாவிற்கு தெரிவித்தார்.

பின்னர் மோசடி செய்து ஏமாற்றியதை அறிந்த எம்.எல்.ஏ சத்திய நாராயணா இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜுன் 6-ம் தேதி தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உதவியாளர் நாகேஷ்வர ரெட்டி எனக்கூறி, ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசா தொகுதி எம்எல்ஏ அப்பாராஜ்க்கு போன் செய்து 15 லட்ச ரூபாய் பெற்றுள்ளார் மர்ம நபர்.

பின்னர் அவை மோசடி போன் கால் என தெரியவந்தது. இதை அடுத்து போலீசில் புகார் அளித்தார். இது போன்று விசாகப்பட்டினம் தெற்கு எம்எல்ஏ வாசுபள்ளி கணேஷ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷவர்தன் ரெடி , முன்னாள் எம்எல்ஏ சுப்பராஜ் ஆகிய 5 பேர் அளித்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி 4 பேர் கொண்ட மோசடி கும்பலை கைது செய்துள்ளதாக கூறினார்.

இதில் முதல் குற்றவாளியான விஷ்ணு என்கின்ற சாகர் பி.டெக் முடித்துள்ளதாகவும், அவர் தனது நண்பர்கள் தருண்குமார், ஜெயகிருஷ்ணா , ஜெகதீஷ் ஆகிய 4 பேருடன் கூட்டாக சேர்ந்து தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில், இணையதள அழைப்பின் மூலமாக முக்கிய பிரமுகர்களின் செல்போன் எண் வழி வழியாக அவர்களுக்கே தெரியாமல முக்கிய பிரமுகர்களுக்கு போன் செய்து பணம் கேட்டு ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், 28 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி, 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.. 

- தமிழ் 

'ஒரே தேசம், ஒரே தேர்தல்' ; பிரதமர் மோடியின் கருத்துக்கு பிரதான கட்சிகள் எதிர்ப்பு - அதிமுகவும் ஒதுங்கியது

You'r reading ஜெகன்மோகன் ரெட்டியின் உதவியாளர் எனக் கூறி பல லட்சம் மோசடி..! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை