பெண் ரூபத்தில் வந்து பாடம் புகட்டும் ஆண்டாள்! தமிழிசை

andal issue: tamilisai soundararajan speech andal teach to vairamuthu Now

by Manjula, Oct 13, 2018, 12:40 PM IST

ஆண்டாளை பழித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவத்தின் மூலம் ஆண்டாள் பாடம் புகட்டுவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு தெரிவித்தது. இதை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

இதில் திரளான ஆண் பெண் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அதே போல் இதில் பாஜகவின் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன்:

“100 ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் பழக்கம் மதிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும். வாக்கு வங்கிக்காகச் சிறுபான்மையினர் தாஜா செய்யப்படுவதும், பெரும்பான்மையினர் உதாசீனப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம்

மத உணர்வும் பண்பாடும் எதிர்க்கப்பட்டால் பொங்கி எழுவோம் என்பதை இந்தக் கூட்டம் நிரூபித்துள்ளது என்று கூறிய அவர், ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு மற்றொரு பெண் வடிவம் எடுத்து ஆண்டாள் முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கிறாள்” என்று வைரமுத்துவை அவர் சாடினார். வைரமுத்து - சின்மயி பிரச்சனையில் சின்மயிக்கு தமிழிசை ஆதரவு தந்தது குறிப்பிடதக்கது.

You'r reading பெண் ரூபத்தில் வந்து பாடம் புகட்டும் ஆண்டாள்! தமிழிசை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை