Aug 10, 2019, 19:05 PM IST
மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. Read More
Aug 10, 2019, 16:43 PM IST
நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும். Read More
Aug 9, 2019, 16:07 PM IST
திரும்பிய இடமெல்லாம் அழகு நிலையங்கள்! அங்கு பல்வேறு அழகு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எல்லா இடங்களிலும் அழகுக்கான பல்வேறு பூச்சுகள் பற்றிய விளம்பரங்கள்! இவை எல்லாம் வேதிப்பொருள்களால் ஆனவை. இயற்கையான பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாப்பதற்கு, மேம்படுத்துவதற்கு முடியாதா? கண்டிப்பாக முடியும். எளிதாக கிடைக்கும் பொருள்களை கொண்டு முக அழகை பாதுகாக்கும் வழிமுறைகள் இதோ... Read More
Aug 7, 2019, 17:01 PM IST
'மனசுல இளமையாதான் இருக்கேன்' என்று கூறினாலும் தோற்றத்தை இளமையாக காட்ட பலர் முயற்சி செய்வர். வயதாகும்போது உடல் செல்களும் முதிர்வடைகின்றன. இது மீட்சியடையாத நிலை என்பதால் உடல் முதுமை தோற்றம் பெறுகிறது. இளமையாக காட்சியளிக்க எத்தனை எத்தனையோ செயற்கை அழகு பொருள்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். Read More
Aug 6, 2019, 17:59 PM IST
செரிமான பிரச்னை சார்ந்த வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல், வாயு கோளாறு, குமட்டல், அடிவயிற்றின் மேற்பக்கம் வலி அல்லது நெஞ்சில் வலி போன்றவை சில நேரங்களில் பித்தப்பை கற்களின் அறிகுறியாக இருக்கக்கூடும். இதற்கென்று தனி அறிகுறிகள் இல்லை. இந்தப் பாதிப்புகள் செரிமான கோளாறுக்கும் இருக்கும். ஆகவே, பெரும்பாலும் பித்தப்பை கற்களால் வரும் பிரச்னை, செரிமான கோளாறு என்றே தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. Read More
Aug 5, 2019, 19:07 PM IST
அந்தக் காலத்தில் பாட்டி, வெங்காயத்தை அரைத்து தலையில் பூசிக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். அரைத்த பச்சை வெங்காயத்தின் வாசனை உங்களுக்குப் பிடிக்காமல் முகத்தை கூட நீங்கள் சுளித்திருக்கலாம். ஆனால், முடி உதிர்வதை தடுக்கும் ஆற்றல் உண்மையில் வெங்காயத்திற்கு உள்ளது. Read More
Aug 3, 2019, 18:29 PM IST
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது. தாய்ப்பாலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இவ்வாரம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. Read More
Aug 2, 2019, 18:21 PM IST
குழந்தைகள் என்ன சாப்பிடுவர் என்றே உறுதியாக கூற இயலாது. பார்த்து பார்த்து சமைத்து வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடமாட்டார்கள். எதை எதையோ வாயில் எடுத்துப் போட்டுக் கொள்வார்கள். Read More
Aug 1, 2019, 17:52 PM IST
சிலருக்கு எடை குறையவேண்டும் என்ற ஆவல் இருக்கும். பாவம்! அதிக 'டயட்' கடைபிடிக்க முடியாமல் திணறுவார்கள். உணவு கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிக்க இயலாதவர்கள், சரியான பானங்களை அருந்துவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்று ஊட்டச்சத்து வல்லுநர்கள் கூறுகிறார்கள். Read More
Aug 1, 2019, 17:07 PM IST
பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 140 mg/dL என்ற அளவுக்குக் குறைவாக இருந்தால் இயல்பு நிலையாக கருதப்படுகிறது. 140 முதல் 199mg/dL என்ற அளவு வரை நீரிழிவு பாதிப்புக்கு முற்பட்ட கட்டம் என்று வகைப்படுத்தப்படுகிறது. Read More