கமலுக்கு 2 மணி நேர அறுவை சிகிச்சை... உடனிருந்து கவனிக்கும் மகள்கள்...
Kamal Haasan undergoes surgery
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து ஸ்டீல் பிளேட் பொருத்தப்பட்டது.
இந்நிலையில் அந்த ஸ்டீல் பிளேட்டை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் நடந்தது. 2 மணி நேர சிகிச்சைக்கு பிறகு ஸ்டீல் பிளேட் அகற்றப்பட்டது. தற்போது மருத்துவமனையில் தனி அறையில் ஓய்வு எடுத்து வருகிறார் கமல்.
அடுத்த சில வாரங்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியிருப்பதால் இந்தியன் 2ம் பாகம் படப்பிடிப்பில் பங்கேற்பதை தள்ளிவைத் திருப்பதுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி பணிகளையும் தள்ளி வைத்திருக்கிறார் மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்ஷா ஹாசன் கமலை உடனிருந்து கவனித்து வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள் கமலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
You'r reading கமலுக்கு 2 மணி நேர அறுவை சிகிச்சை... உடனிருந்து கவனிக்கும் மகள்கள்... Originally posted on The Subeditor Tamil
More Cinema News