அபிராமி மெகா மால் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிரடி குறைப்பு
சென்னையில் அமைந்துள்ள அபிராமி மெகா மால் தியேட்டர்களில் டிக்கெட்டின் விலை இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை, புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது அபிராமி மெகா மால். இங்கு, பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களுடன் நான்கு தியேட்டர்களும் அமைந்துள்ளது. இந்த தியேட்டர்களில் அதிகபட்சமாக 160 மற்றும் 140 ரூபாய் என டிக்கெட் விலைகள் இருந்தன.
இந்நிலையில், இதன் விலை அனைத்து வரிகளும் சேர்த்து 101 ரூபாயாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் இந்த டிக்கெட் விலை குறைப்பு வரும் மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, மீண்டும் பழைய விலைக்கே மாறிவிடும் என அபிராமி மெகா மாலின் உரிமையாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
You'r reading அபிராமி மெகா மால் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிரடி குறைப்பு Originally posted on The Subeditor Tamil
More Cinema News