நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் காதல் நடனம்.. கண்டிஷன் இல்லாத காதல் தொடர்கிறது..

by Chandru, Feb 15, 2020, 20:39 PM IST

நயன்தாரா, விக்னேஷ்சிவன் காதல் அறிவிக்கப்படாத காதலாக இருந்தாலும் இரு உள்ளங்களுக்கிடையேயான உன்னத காதலாக வளர்ந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதாக வந்த தகவலை காதலர் தினத்தில் இருவரும் இணைந்து பொய்யாக்கியிருக்கின்றனர்.

நயன்தாராவுடன கைகோர்த்து காதல் நடனம் ஆடியபடி ஒரு அழகு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். அதுமட்டுமல்லாமல் இணைப்பாக மேலும் 2 படங்களை வெளியிட்டுள்ளார். இப்படங்கள் நெட்டில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் வாழ்த்துக்களை அள்ளிக்கொண்டிருக்கிறது.

காதலை வெளிப்படுத்தி யிருக்கும் விக்னேஷ்சிவன்,'இது என் குட்டி கதை.. ஐந்து ஆண்டு பழையது. காற்றுவாக்குலே 5 வருடம் அழகான தருணங்கள் உன்னுடன் நிறைந்திருக்கிறது நயன்தாரா! ஒவ்வொரு நாளும் நமக்கு காதலர் தினம்தான். உன்னுடைய கண்டிஷன் இல்லாத காதலும், அன்பும் என் மீது தினம் தினம் பொழிகிறது என தெரிவித்திருக்கிறார் விக்னேசிவன்.

You'r reading நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் காதல் நடனம்.. கண்டிஷன் இல்லாத காதல் தொடர்கிறது.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை