தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிக்கை..

producer welfare protuction team statement

by Chandru, May 26, 2020, 09:54 AM IST

தமிழ்த் திரைப்பட நலன் காக்கும் அணியினர் திரை அரங்கு உரிமையாளர்களுக்கு விடுத்துள்ள புதிய கோரிக்கைகள் வருமாறு :இந்த காலகட்டத்தில் திரைப்படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், அதனை வெளியிடும் வினியோகஸ்தர்கள், அதனைத் திரையிடும் திரையரங்கு உரிமையாளர்கள், ஆகிய அனைவருக்கும் நன்மையுடன் கூடிய லாபம் கிடைக்க நாம் அனைவரும் ஒன்று கூடிப் பேசி. சில நடைமுறை சீர்திருத்தங்கள் கொண்டு வந்து நாம் அனைவரும் பயனடைய வேண்டி கீழ்க்கண்ட நிலைப்பாடு.


1) சிறு முதலீட்டுப் படங்களுக்குத் திரையரங்குகளில் ஒரு காட்சி மட்டுமே என்ற நிலை மாறி குறைந்த பட்சம் நூறு திரையரங்குகளில் மூன்று காட்சிகள் திரையிட வேண்டும்.

2) க்யூப், யூ எப் ஓ போன்ற டிஜிட்டல் புரெஜெக்ஷன் வி.பி,எப். கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே செலுத்த வேண்டும்.

3) எல்லா திரையரங்குகளிலும் ஆன்லைன் டிக்கெட் மூலம் வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பங்கு கொடுத்திட வேண்டும்.

4) திரையரங்குகளில் படம் ஓடி முடித்தவுடன் அந்த படத்தைத் திரையிட்ட தயாரிப்பாளருக்கோ / வினியோகஸ்தருக்கோ உடனுக்குடன் அவருடைய விகிதாச்சார பங்கினை வழங்கிட வேண்டும்.

5) தியேட்டர் வாடகையை 50 சதவிகிதம் வரை குறைத்து வசூலிக்க வேண்டும்.

6) அனைத்து திரையரங்குகளையும் கணினி மயமாக்கி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

7) திரையரங்கில் ஒளி பரப்பப்படும் விளம்பர வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும்.

8) தமிழ் திரைப்படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். திரைப்படம் வெளியிடும் போது கன்ஃபர்மேசனை சிண்டி கேட் அமைத்து கன்ஃபார்ம் செய்யக்கூடாது.

9) ஜெனரேட்டர் சார்ஜ் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

10) தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அடங்கிய குழு ஏற்படுத்தி இரு சாரரும் அவ்வப்பொழுது நிகழும் சம்பவங்களை கலந்து பேசி நிறைகளை நிறைவேற்றி, குறைகளை கலைக்க வேண்டும்.

மேற்கண்ட புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து திரையுலகில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் பாதிப்படையாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் அணியின் நிலைப்பாடு. இவ்வாறு கூறி உள்ளனர்.

இந்த அறிக்கையைத் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணியைச் சேர்ந்த முரளி இராம.நாராயணன் என்கிற N.இராமசாமி
R.ராதா கிருஷ்ணன்
S.சந்திரபிரகாஷ் ஜெயின்
ராஜேஷ் (கே.ஜே.ஆர்)
மைக்கேல் ராயப்பன்
N.சுபாஷ் சந்திரபோஸ்.
தயாரிப்பாளர்களின்
மற்றும் செயற்குழு உறுப்பினர் வேட்பாளர்கள் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

You'r reading தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி அறிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை