இறந்த இயக்குனர் கண்டுபிடித்த பார்த்திபன் பாத்திரம்..
Parthiban reacts to Ayyappanum Koshiyum directors desire
மலையாள பட இயக்குனர் சச்சி இயக்கிய படம் ஐய்யப்பனும் கோஷியும். இதில் பிரித்விராஜ், பிஜூன்மேனன் நடித்திருந்தனர். இப்படத்தைத் தமிழில் ரீமேக் செய்தால் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு பிரித்வி கதாபாத்திரத்தில் கார்த்தி, பிஜுமேனன் பாத்திரத்துக்குப் பார்த்திபன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று இறப்பதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார் இயக்குனர் சச்சி.இந்த விஷயம் நடிகர் பார்த்திபனுக்குத் தெரிய வந்து மகிழ்ச்சி அடைந்தார்.
இது பற்றி பார்த்திபன் கூறும்போது.அய்யப்பனும் கௌஷியும்பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்குமெனப் பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலைகுலைந்தது. இன்று படத்தைப் பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கிறேன். மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்” என்றார்.
You'r reading இறந்த இயக்குனர் கண்டுபிடித்த பார்த்திபன் பாத்திரம்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News