தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் கடைசி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் ரசிகர்கள் காத்திருப்பு..
Sushant last Film Dil Bechara Release in Disney+ Hotstar on July 24th
கடந்த வாரம் 14ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுஷாந்த் சிங் ராஜ்புத் கடைசியாக நடித்த இந்தி படம் தில் பெச்சாரா கடந்த மே மாதம் வெளியாகவிருந்தது.
கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் ஆகவில்லை. இனி தியேட்டரில் வெளியிட எவ்வளவு மாதம் ஆகும் என்று தெரியாத நிலையில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 24-ம் தேதி ஹாட் ஸ்டாரில் இப்படம் வெளியாகிறது. இப்படத்தை மகேஷ் சாப்ரா இயக்கி உள்ளார். சஞ்சனா ஷங்கி ஹீரோயினாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சயீப் அலிகான் நடிக்கிறார். இது மனதை உருக வைக்கும் காதல் கதையாக உருவாகி இருக்கிறது
You'r reading தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் கடைசி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் ரசிகர்கள் காத்திருப்பு.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News